Friday, July 08, 2005

நாட்டுப்புறப் பாடல்கள் - 2

என் மாமியார் பாடும் பாட்டுகளில் என் மகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான்! இதன் ராகமும், பாடும் தொனியும் எழுத்தில் தர முடியாவிட்டாலும், வரிகளைத் தருகிறேன்.

கண்ணான கண்ணோ


கண்ணான கண்ணுக்கு கண்ணீரு ஆகாது
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் சுத்தியெறி கண்ணாக்கு
வேப்பலையும் காப்புமாய் வீசியெறி கண்ணாக்கு

கண்ணான கண்ணோ கரும்பான செங்கரும்போ
செங்கரும்போ தேனோ திகட்டா திரவியமோ

முத்து முத்தாம் செங்கழனி முத்தமெலாம் கொத்தரளி
கொத்தரளி பூ பூக்கும் கொடியரளி பிஞ்சு விடும்
நித்தம் ஒரு பூ பூக்கும் நிமிஷம் ஒரு பிஞ்சு விடும்
நூத்திலொரு பூவெடுத்து முடிப்பார் மகளாரோ?

ஆறிரெண்டும் காவேரி அதன் நடுவே ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ஆடி திருப்பாற் கடலாடி
மாமாங்கம் ஆடி மதுரைக் கடலாடி
தைப்பூசம் ஆடி நீ தவம் பெற்று வந்தாயோ

யாரடா தோட்டத்திலே மானடா மேய்கிறது
மானோடும் வீதியெல்லாம் தானோடி வந்தாயோ
தானோடி வந்து தந்த திரவியமோ
தேனோ திரவமோ திலகமோ சித்தடியோ

சித்தடியே சித்தடியே இத்தனை போதெங்கிருந்தாய்
சுற்றிவந்து பூப்பறிக்கும் என் சித்தடியே யாரடிச்சா

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே

செட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே
வைக்கத்து செட்டியாரே கண்டீரோ அம்மானை
கண்டேன் கடையிலே கற்கண்டு வாங்கச்சே
பார்த்தேன் கடையிலே பால் பசுக்கள் வாங்கச்சே

அம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு
அம்மான் தன் பொன்னான வாயாலே போவென்று சொன்னானோ
ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்சனக்கண் மை கரைய
தானே அழுகிறாய் உன் தாமரைக்கண் மை கரைய

ஆரடிச்ச கண்ணீரு ஆறாப் பெருகறது
இது தாய் அடிச்ச கண்ணீரு தாரையா ஒடுறது

ஆறாப் பெருகி ஆனை குளிச்சேறி
குளமாப் பெருகி குதிரை குளிச்சேறி
வாய்க்காலா ஓடி வழிப்போக்கர் காலலம்பி
என் கண்மணியே கண்மணியே கண்மணியே கண்மலறாய்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

interesting.
i have heard another lullaby with similar words and some similar sentences.you can record it and
post as an audio blog post.or upload in the web and give link.

1:32 PM  
Blogger Nadopasana said...

பாட்டி அடிச்சாளோ பால் போட்டும் கையாலே
அத்தை அடிச்சாளோ அரவணைக்கும் கையாலே
சித்தி அடிச்சாளோ சீராட்டும் கையாலே
அம்மான் அடிச்சானோ ஆதரிக்கும் கையாலே

I have heard Bombay Jayashree(carnatic singer) sing this song in her album for lullabies.She has sung this excellently.

9:21 PM  
Blogger Ganesh Gopalasubramanian said...

// செட்டியாரே செட்டியாரே செம்பவழ செட்டியாரே //
அது என்ன "செம்பவழ செட்டியார்" ?

// ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்ஞனக்கண் மை கரைய //
"அஞ்ஞனக்கண் மை கரைய" என்றால் என்ன?

// அம்மான் கொல்லையிலே அவலுக்கு நெய் கேட்டு //
"அவலுக்கு நெய் கேட்டு" இது என்ன படிமம்?

9:31 PM  
Blogger ரங்கா - Ranga said...

என்னக்குத் தெரிந்த வரையில் இதன் அர்த்தம்:
"செம்பவழம் போன்ற சிவந்த நிறத்தை உடைய செட்டியாரே"

அஞ்சனம் என்றால் கருப்பு - அஞ்சனக் கண் - கரிய கண்

அவலைக் கேட்டால் கொடுக்காமல், அதைச் சாப்பிட 'நெய் வேண்டும் - போய் கொண்டு வா' என மாமன் குழந்தையை போகச் சோல்லி விட்டானோ என்னமோ?

வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்!

11:19 AM  
Blogger neyvelivichu.blogspot.com said...

// ஆரடிச்சு நீ அழறே உன் அஞ்ஞனக்கண் மை கரைய //
"அஞ்ஞனக்கண் மை கரைய" என்றால் என்ன?

இது ஒருபொருட்பன் மொழி.. ஒரெ பொருளை இரண்டு பெயர்களில் குறிப்பிடுவது. நடு சென்டர் மாதிரி.. (தமிழ் உதாரணம் ஏதும் நினைவுக்கு வரவில்லை)

அஞ்சனம் என்றாலும் கண் மை என்றாலும் ஒன்றே.

செம்பவழச் செட்டியார் என்பது மருவாக இருக்கலாம்.. அடுத்த வரியில் வைக்கத்துச் செட்டியார் என்று வருகிறது.. இதுவும் அது போல எதாவது ஊர் பேராக இருக்கலாம்.

சந்தேகம் தீர்க்கக் கூடிய விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், புஷ்பவனம் குப்புசாமி போன்றோர் வலைபதிவதில்லையா..


அன்புடன் விச்சு

12:50 PM  
Blogger Jay said...

Thank you Mr. Srinivas. I have recorded the first two songs and published in audio form.

8:11 PM  
Blogger திவாண்ணா said...

செம்பவழம் விற்கும் செட்டியார்....

10:44 PM  

Post a Comment

<< Home