Friday, July 08, 2005

நாட்டுப்புறப் பாடல்கள் - 3

நெல் குத்தும்போது பாடுகிற பாடல். வெளியூரிலிருந்து வரும் பையனை எதிர்பார்க்கும் அன்னைக்கு பாடுவது போல் அமைந்துள்ளது. அன்று பட்டணம் போன பையனை எதிர் பார்க்கும் அன்னை. இன்று வெளிநாடு சென்ற மகனை எதிர் பார்க்கும் அன்னை…

குத்தடி குத்தடி சைலக்கா

குத்தடி குத்தடி சைலக்கா
குனிந்து குத்தடி சைலக்கா
பந்தலிலே பாகக்காய்
தொங்குதடி டோலாக்கு
பையன் வரான் பார்த்துக்கோ
பணம் கொடுப்பான் வாங்கிக்கோ
சுருக்கு பையிலே போட்டுக்கோ
வெள்ளை இட்டலி வாங்கலாம்
வேற பட்டணம் போகலாம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger சுந்தரவடிவேல் said...

தேக்கம்பட்டி சுந்தர்ராஜனும், கிடாக்குழி மாரியம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி மதுரை ராம்ஜி நாட்டுப் புற ஆராய்ச்சி மையம் வெளியிட்ட குறுந்தகட்டில் கேட்டிருக்கிறேன். பாடல்கள் நன்று.

11:34 AM  
Blogger Jay said...

Thanks for your feedback. I have tried to add more songs in the text as well as audio form. Please let me know if you like them.

8:10 PM  

Post a Comment

<< Home