Friday, July 22, 2005

குழந்தைப் பாடல்கள் - 2

நான் அடுத்துப் பதியும் இந்த நான்கு பாட்டுக்களும் மிகவும் பிரபலமானவை. இந்தப் பாடல்கள் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்தவாறு மாறுபாடுகளுடன் வெகு காலமாகப் பாடப் பட்டு வருபவை. இவற்றை புத்தகங்களில் நீங்கள் படித்திருக்கலாம். எங்கள் வீட்டில் பாடப்படும் வரிகளை இங்கு தந்திருக்கிறேன். இதைத் தவிற வேறு விதமான வரிகள் இருந்தால் இங்கு பதிக்கவும்; அல்லது இணைப்பை பின்னூட்டமிடவும்.

பச்சைக்கிளியே வா வா

பச்சைக்கிளியே வா வா
பாலும் சோறும் உண்ண வா
கொச்சி மஞ்சள் பூச வா
கொஞ்சி விளையாட வா
கவலையெல்லாம் நீங்கவே
களிப்பெழுந்து பொங்கவே
பவள வாய் திறந்து நீ
பாடுவாயே தத்தம்மா
பையப் பைய பறந்து வா
பாடிப் பாடிக் களித்து வா
கையில் வந்து இருக்க வா
கனி அருந்த ஓடி வா

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Jay said...

மஞ்சுளா, தகவலுக்கு நன்றி.

மூர்த்தி, உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. உங்கள் மன்றத்தில் தாராளமாகப் பதிப்பிக்கலாம். பொருளீட்டும் வண்ணம் அமையாமல் இருக்க வேண்டும் என்று விண்ணப்பிக்கிறேன். எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை தயவுசெய்து குறிப்பிடவும்.

7:34 AM  

Post a Comment

<< Home